இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கடல் பகுதியில் 6.4 ரிக்டா் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜாபா தீவுக்கு வடக்குக் கடலோரப் பகுதியிலேயே இன்று இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை எனவும், சுனாமி ஏற்படக்கூடும் என்ற அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படகிறது.
Comments are closed.