24 65fd666121302
உலகம்செய்திகள்

குலைநடுங்கவைத்த ரஷ்யா… மொத்தமாக இருளில் மூழ்கிய உக்ரைன்

Share

குலைநடுங்கவைத்த ரஷ்யா… மொத்தமாக இருளில் மூழ்கிய உக்ரைன்

ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை முன்னெடுத்து உக்ரைனின் பெரும்பகுதியை இருளில் மூழ்கடித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கிய பின்னர், இதுவரை ரஷ்யா முன்னெடுத்த தாக்குதல்களில் மிகப்பெரியதாக இது கருதப்படுகிறது. சுமார் 90 ஏவுகணைகள் மற்றும் 60 ட்ரோன்கள் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Dnipro மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்தே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெல்ன்ஸ்கி தெரிவிக்கையில், ஈரான் தயாரிப்பு ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியுள்ளது என்றார். மட்டுமின்றி, ரஷ்ய பயங்கரவாதிகளின் இலக்கு எது என்பதை உலகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.

மின் உற்பத்தி நிலையங்கள், மின்சார விநியோகக் கம்பிகள், நீர்மின் அணை, சாதாரண குடியிருப்பு கட்டிடங்கள் என அவர் பட்டியலிட்டுள்ளார். தொடர்புடைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான தகவலேதும் இதுவரை வெளியாகவில்லை.

Dnipro மின் உற்பத்தி நிலையமானது உக்ரைனின் மிகப்பெரிய நீர்மின் நிலையமாகும். அது தற்போது கொழுந்துவிட்டெரிகிறது. ஆனால் அந்த தாக்குதலில் இருந்து அணை தப்பியதாகவே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...