பிரித்தானியர்களுக்கு பாஸ்போர்ட் தொடர்பில் ஒரு முக்கிய அறிவிப்பு
பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்கான கட்டணம் 7 சதவிகிதம் வரை அதிகரிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல், சுற்றுலா செல்லத் திட்டமிட்டுவரும் பிரித்தானியர்களுக்கு இன்னொரு சுமையாக அமைய உள்ளது.
அடுத்த மாதம் பாஸ்போர்ட் கட்டணங்கள் அதிகரிக்க உள்ளதாக உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. 16 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களுக்கான ஒன்லைன் விண்ணப்பங்களுக்கான கட்டணம், 82.50 பவுண்டுகளிலிருந்து 88.50 பவுண்டுகளாகவும், 16 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணம், 53.50 பவுண்டுகளிலிருந்து 57.50 பவுண்டுகளாகவும் உயர உள்ளது.
வெளிநாடுகளிலிருந்து தபால் வழியாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களுக்கான கட்டணமும் மேற்குறிப்பிட்ட அளவிலேயே அதிகரிக்க உள்ளது.
இந்த புதிய கட்டண உயர்வு, ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி அமுலுக்கு வருகிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாஸ்போர்ட் கட்டணங்கள் சுமார் 9 சதவிகிதம் அதிகரித்த நிலையில், தற்போது அவை மீண்டும் 7 சதவிகிதம் உயர இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.