உலகம்
கனடாவில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வங்கிகள்
கனடாவில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வங்கிகள்
கனடாவில் வங்கிகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக அந்நாட்டு முன்னணி ஊடக நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் முக்கிய வங்கிகள் பலவற்றில் பணியாற்றி வரும் ஊழியர்கள் இவ்வாறு வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக இரகசிய ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
வங்கி நிர்வாகங்கள் அறிவிக்கும் விற்பனை சார் இலக்குகளை எட்டுவதற்காக இவ்வாறு வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்களது நிறுவன உற்பத்திகளை விற்பனை செய்து கொள்வதற்காக வங்கிப் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் பொய்யுரைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்களக்கு பொருத்தமற்ற நிதியியல் உற்பத்திகளை பிழையான தகவல்களை வழங்கி அவர்களுக்கு விற்பனை செய்வதாகவும், இலாபத்தை ஈட்டும் நோக்கில் வங்கி அதிகாரிகள் பணியாளர்கள் மீது இவ்வாறு விற்பனை இலக்குகளை நிர்ணயித்து அழுத்தங்களை பிரயோகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொழில் அழுத்தம் காரணமாக வங்கிப் பணியாளர்கள் இவ்வாறு வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வங்கி மேலதிகாரிகள் பணியாளர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பது இரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, வங்கி வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்கு நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.