tamilnif 9 scaled
உலகம்செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி! வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

Share

நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி! வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கனமழையால் உண்டான நிலச்சரிவில் 26 பேர் பலியாகினர்.

கடந்த சில நாட்களாக தெற்கு சுமத்ரா தீவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கின.

அவற்றில் 14 வீடுகள் மண்ணில் புதைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 11 பேர் மாயமானதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் பெசிசிர் செலாட்டான், படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 26 பாலங்கள், 13 சாலைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...

21 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை 2025 இல் உயர் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது: அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தகவல்!

சர்வதேச பொருளாதாரத் தரவுகளின்படி, கடந்த கால சவால்களை முறியடித்து இலங்கை 2025 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க...

20 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மே 25 வரை தொடரும் கடும் வெப்பம்: எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையின் பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலையானது, எதிர்வரும் மே மாதம்...

19 11
செய்திகள்உலகம்

ஈரானிய போர்க்கப்பல் மீதான தாக்குதல்: “தகுந்த பதில் வழங்கப்படும்” – ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை!

இந்தியப் பெருங்கடலில் வைத்து ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான நவீன போர்க்கப்பலான ‘ஐரிஸ் டேனா’ (IRIS Dena)...