உலகம்செய்திகள்

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு! உள்ளிருக்கும் தங்க சுரங்கங்கள்

tamilni 160 scaled
Share

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு! உள்ளிருக்கும் தங்க சுரங்கங்கள்

இந்தப் பூமியில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களாகிய நாங்கள் பூமியின் மையத்தில் உள்ள நாடு எது? அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? அந்த இடத்தின் சூழல் எப்படி இருக்கிறது? இந்த வினாக்களுக்கான விடைகளை தேடிக்கொண்டிருக்கின்றோம்.

விஞ்ஞானத்தின்படி பூமியின் உச்ச மையத்தில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. அதற்கு மிக அருகில் உள்ள நகரம் கானாவின் தகோராடி ஆகும்.

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானா ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. வானியலாளர்களின் கூற்றுப்படி, கானா நாடு பூமியின் மையத்திலிருந்து 380 மைல் தொலைவில் உள்ளது. அதனால்தான் இந்த இடத்தை பூமியின் அடையாளமாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள இந்த கானா நாட்டின் வரலாறு மிகவும் மர்மமானது. நடுவில் இருப்பதால், இங்குள்ள வளிமண்டலம் முற்றிலும் வேறுபட்டது.

உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​இங்கு அதிக வெப்பம் நிலவுவதுடன் மே, ஜூன் ஆகிய மாதங்களில் அதிக வெப்பம் நிலவுவதால், வெளியில் சென்றால் தீயில் எரியும் அளவிற்கு வானிலை நிலவுவதாக தெரிகிறது.

ஒரு காலத்தில் கானா நாடு மிகவும் வளமான நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு தங்கச் சுரங்கங்கள் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் விநியோகிக்கக்கூடிய அளவுக்கு இங்கு தங்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த தங்கச் சுரங்கங்களைப் பிடிக்க போர்த்துக்கேயர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே பல போர்கள் நடந்ததாகவும் வரலாறு உண்டு.

மேலும், கானா மக்களின் வாழ்க்கை முறை மிகவும் சுவாரஸ்யமானது. அங்கு பலர் வண்ணமயமான ஆடைகளில் காணப்படுவார்கள்.

கானா, மனிதனால் உருவாக்கப்பட்ட வோல்டா ஏரியின் தாயகமாகும். வோல்டா ஏரி பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஏரி ஆகும். கொள்ளளவு அடிப்படையில், இது உலகில் நான்காவது மிகப்பெரிய ஏரியாக சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர், நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக இந்த ஏரி முதன்மையாக உருவாக்கப்பட்டது.

தற்போது, 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கானா, மேற்கு ஆபிரிக்காவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...