tamilni 208 scaled
உலகம்செய்திகள்

போர் மற்றும் தடைகளுக்கு மத்தியில் அசுர வளர்ச்சி காணும் ரஷ்யா: தடுமாறும் எஞ்சிய G7 நாடுகள்

Share

போர் மற்றும் தடைகளுக்கு மத்தியில் அசுர வளர்ச்சி காணும் ரஷ்யா: தடுமாறும் எஞ்சிய G7 நாடுகள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக உக்ரைன் மீதான போர் நீடித்துவரும் நிலையிலும் ரஷ்யாவின் பொருளாதாரம் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளை விட வேகமாக வளர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான திடீர் போருக்கு பின்னர் ரஷ்யா மீது அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதுடன், ஏற்றுமதிக்கும் வாய்ப்பில்லாத நிலையை உருவாக்கின.

ஐரோப்பாவிலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் பிடித்துவந்த ஜேர்மனி, தற்போது கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் விளாடிமிர் புடின் தவறிழைத்திருந்தாலும், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பெல்ஜியம் தலைவர்களும் இன்னொருவகையில் தவறிழைத்துள்ளதாகவே நிபுணர்கள் தரப்பின் வாதமாக உள்ளது.

ரஷ்யாவின் பொருளாதாரத்தை மொத்தமாக சீர்குலைக்க முடியும் என்று நம்பி கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்த ஜோ பைடன் மற்றும் அவரது ஆதரவு தலைவர்கள், உக்ரைனுக்கு வாரி வழங்கினர்.

உக்ரைன் மீது படையெடுக்கும் முன்னரே பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள ரஷ்யா தயாராகி வந்ததாகவே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ரஷ்யாவிடம் இருந்து குறைவான கட்டணத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. ரஷ்ய மின்சாரம் மற்றும் எரிவாயு இன்றி ஜேர்மனி தற்போதும் தடுமாறி வருகிறது.

ஆனால் ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து, பலர் ரஷ்யாவை நாடினர். பொருளாதாரத் தடைகள் விதித்திருந்தும், அமெரிக்காவும் பிரித்தானியாவும் குறிப்பிட்ட மூலப் பொருட்களுக்கு ரஷ்யாவையே தற்போதும் நம்பியுள்ளது.

மேலும், உக்ரைன் போரினால் சராசரி ரஷ்ய மக்கள் நேரிடையாக பாதிக்கப்படாத வகையில் புடின் பார்த்துக்கொண்டுள்ளார். ராணுவ தளவாட உற்பத்தியால், ரஷ்யா தனது பொருளாதாரத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக தூக்கி நிறுத்தியுள்ளதாகவே நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் உண்மையில் ரஷ்யாவை பாதிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் மின்சாரம், எரிவாயு என ரஷ்யாவை நம்பியிருந்த பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...