பாரீஸில் வாழும் மக்களுக்கு பிரான்ஸ் அரசு விடுத்துள்ள கோரிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வாழும் மக்களுக்கு பிரான்ஸ் அரசு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், இந்த ஆண்டு, ஜூலை மாதம் 26ஆம் திகதி முதல் ஆகத்து மாதம் 11ஆம் திகதி வரை, ஒலிம்பிக் போட்டிகளும், ஆகத்து 27 முதல் செப்டம்பர் 8 வரை, பாராப்லிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளின்போது பாரீஸில் வாழ்பவர்கள் பார்சல்களை அனுப்பவேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அரசு இணையதளத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 24ஆம் திகதி முதல் ஆகத்து மாதம் 12ஆம் திகதி வரையும், ஆகத்து 27 முதல் செப்டம்பர் 8ஆம் திகதி வரையும் பாரீஸில் வாழ்பவர்கள் பார்சல்களை அனுப்பவேண்டாம் என போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த காலகட்டத்தில் பார்சல் சேவை நடைபெறுமானால், போக்குவரத்துக் குறைவாக உள்ள நாட்களில் பார்சல்களை அனுப்புமாறும், பாதுகாப்பு வளையங்களுக்கு வெளியில் அமைந்துள்ள பார்சல் பெறும் இடங்களுக்கு நடந்தோ அல்லது சைக்கிளில் சென்றோ பார்சல்களைக் கொண்டு சென்று உதவுமாறும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது அமைச்சகம்.
Comments are closed.