1 10 scaled
உலகம்செய்திகள்

பொருளாதார வீழ்ச்சியில் ஜேர்மனி- அரசாங்கம் விடுத்த மகிழ்ச்சி அறிவிப்பு

Share

பொருளாதார வீழ்ச்சியில் ஜேர்மனி- அரசாங்கம் விடுத்த மகிழ்ச்சி அறிவிப்பு

ஜேர்மன் அந்நாட்டு ஊழியர்களின் வேலை நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளது.

ஜேர்மனி பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து வருவதால் அந்நாட்டு ஊழியர்களின் மத்தியில் ஒரு புதிய சோதனையை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வருகின்ற ஆறு மாதங்களுக்கு ஊழியர்களின் வேலை நாட்களை வாரத்தில் 4 நாட்களாக குறைப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனால் ஊழியர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியம் மேம்படும் எனவும் வினைத்திறன் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டமானது நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என பல தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆரம்பக்கட்ட சோதனையாக அந்நாட்டின் 45 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

மேலும் இத்திட்டம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் குறைவான வேலை நேரத்தை கடைபிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...