உலகம்
ஈராக்கில் ஒரே நாளில் 13 கைதிகளுக்கு மரண தண்டனை
ஈராக்கில் ஒரே நாளில் 13 கைதிகளுக்கு மரண தண்டனை
ஈராக் டெஹரானில் பல்வேறு குற்றச்செயல்களில் தண்டனை விதிக்கப்பட்ட 13 சிறை கைதிகளுக்கு திடீரென ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக்கின் தெற்கு மாகாணத்தில் உள்ள நஸ்ரியாக் சிறையில் 13 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்போவதாக ஒலிபெருக்கியில் சிறை நிர்வாகம் கடந்த 24 ஆம் திகதி அறிவித்திருந்தது.
இதன்படி, மறுநாள் 25 ஆம் திகதி அதிகாலை 13 கைதிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றியதாக கூறப்படுகின்றது.
இருப்பினும் ஈராக் அரசு முன்னர் பெரும் குற்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் குடும்பத்தினருக்கு முறையான அறிவிப்பு வழங்கிய பின்னரே தண்டனையை நிறைவேற்றி வந்துள்ளது.
இந்நிலையில், 13 சிறைகைதிகளுக்கு திடீரென மரண தண்டனை நிறைவேற்றியமைக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.