உலகம்
மூன்று குடியிருப்புகளில் இருந்து மீட்கப்பட்ட 8 சடலங்கள்: தீவிரமாக தேடப்படும் இளைஞர் ஒருவர்
மூன்று குடியிருப்புகளில் இருந்து மீட்கப்பட்ட 8 சடலங்கள்: தீவிரமாக தேடப்படும் இளைஞர் ஒருவர்
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் எட்டு பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் இளைஞர் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிகாகோ புறநகர் பகுதியான ஜோலியட்டில் இரண்டு குடியிருப்புகளுக்குள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் பொலிசாரால் தேடப்படும் நபர், சடலமாக மீட்கப்பட்டவர்களுக்கு அறிமுகமானவர் என்றே அதிகாரிகள் நம்புகின்றனர்.
பொலிசாரால் தேடப்படும் நபர் 23 வயதான Romeo Nance என ஜோலியட் காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மட்டுமின்றி, குறித்த இளைஞரிடம் ஆயுதம் இருக்கலாம் என்றும் அவர் ஆபத்தான நபராக கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜோலியட் டவுன்ஷிப்பில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர். 28 வயதான அந்த நபர் நைஜீரிய நாட்டவர் என்றும், கடந்த 3 ஆண்டுகளாக அவர் அமெரிக்காவில் குடியிருந்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் பொலிசாருக்கு தெரியவந்தது.
தொடர்புடைய கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் வாகனம் ஒன்றை அடையாளம் கண்ட பொலிசார், அந்த வகானத்தின் உரிமையாளர் 23 வயதான Romeo Nance என பொலிசார் உறுதி செய்தனர்.
தொடர்ந்து அந்த நபரை விசாரிக்கும் பொருட்டு அவரது குடியிருப்பு முகவரிக்கு சென்ற பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. Romeo Nance தொடர்புடைய இரண்டாவது குடியிருப்பிலும் தெருவிலும் ரத்தக்கறையை பொலிசார் கண்டுள்ளனர்.
உள்ளே சென்ற அதிகாரிகள் இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர். அத்துடன் Romeo Nance-வின் குடியிருப்பில் இருந்தும் 5 சடலங்களை மீட்டுள்ளனர். மொத்தமாக 3 குடியிருப்புகளில் இருந்து 8 சடலங்களை இரண்டு நாட்களில் பொலிசார் மீட்ட நிலையில், தொடர்புடைய Romeo Nance தலைமறைவாகியுள்ளது பொலிசாருக்கு தெரியவந்தது.
இதனிடையே 42 வயதான ஒருவர் இச்சம்பவத்தில் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நபருக்கும் Romeo Nance குடும்பத்தினருக்கும் தொடர்பில்லை என்றே விசாரணையில் தெரியவந்துள்ளது.