உதயநிதியை ஹிந்தியில் விமர்சித்த பாஜக.., ஒற்றை புகைப்படம் மூலம் சாதுர்யமாக பதில்
பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஹிந்தி மொழியில் விமர்சித்ததற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயிலின் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த விழா குறித்து முன்னதாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ராமர் கோயில் விழா திறப்புக்கு நாங்கள் எதிரி அல்ல. ஆனால், மசூதியை இடித்து விட்டு கோயிலை கட்டியதற்கு திமுகவுக்கு உடன்பாடில்லை” என்று கூறியிருந்தார்.
அயோத்தியில் வரலாறு காணாத கோலாகலம்.., ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
அயோத்தியில் வரலாறு காணாத கோலாகலம்.., ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
அதுமட்டுமல்லாமல், சனாதனத்தை பற்றி உதயநிதி பேசிய கருத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில் “இந்த அநியாயக்காரர்களை அடையாளம் காணுங்கள், அவர்கள் ராமர் கோவிலை எதிர்த்து சனாதன தர்மத்தை அவமதிக்கிறார்கள்” என்று ஹிந்தி மொழியில் பதிவிட்டிருந்தது.
Comments are closed.