tamilni 517 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் கடந்த 5 ஆண்டுகளில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் உயிரிழப்பு

Share

கடந்த 5 ஆண்டுகளில் கனடாவில் அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ட்ரூடோ அரசு கவலை தெரிவித்துள்ளது.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சில காலமாக நல்லுறவு இல்லை. குறிப்பாக ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணம் தொடர்பாக இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே நிலவும் மோதல் நிலைமையை மோசமாக்கியுள்ளது. இருந்தும் இந்திய மாணவர்களின் கனடா செல்லும் ஆர்வம் குறையவில்லை.

கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகியவை இந்திய மாணவர்களுக்கு மிகவும் விருப்பமான நாடுகளில் உள்ளன, ஆனால் கனடாவில் இந்திய மாணவர்களின் இறப்பு கவலைகளை எழுப்பியுள்ளது.

2018-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக இந்திய மாணவர்களின் இறப்புகளை கனடா பதிவு செய்துள்ளது.

கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசும் இது குறித்து கவலை தெரிவித்ததுடன், சர்வதேச மாணவர்களின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

2024-25 கல்வியாண்டு தொடங்கும் முன் இந்த புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த கனடா அரசு இலக்கு வைத்துள்ளது.

அரசாங்கத்தின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (Immigration, Refugees and Citizenship Canada, IRCC), மாணவர்களின் கவலைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை உருவாக்க மாகாணங்களும் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறது.

தி பிரிண்ட் அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2018 முதல், வெளிநாட்டில் 403 இந்திய மாணவர்களின் இறப்புகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிவு செய்துள்ளது.

இதில் 91 இந்திய மாணவர்கள் கனடாவில் உயிரிழந்துள்ளனர்.

இயற்கையான காரணங்கள், விபத்துக்கள் மற்றும் மருத்துவ நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன.

கனடாவைத் தொடர்ந்து பிரித்தானியாவில் 48 மாணவர்களும், ரஷ்யாவில் 40 பேரும், அமெரிக்காவில் 36 பேரும், அவுஸ்திரேலியாவில் 35 மாணவர்களும் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் தெரிவித்தார்.

இந்திய மாணவர்களுக்கான இரண்டாவது தேர்வாக கனடா உள்ளது. பிப்ரவரி 2023-ல் வெளியுறவு அமைச்சகம் மாநிலங்களவையில் வழங்கிய தரவுகளின்படி, 2018 மற்றும் 2022க்கு இடையில் 5,67,607 இந்தியர்கள் கனடாவில் படிக்க வெளிநாடு சென்றுள்ளனர்.

2018 மற்றும் 2022க்கு இடையில், அதிகபட்சமாக 6,21,336 இந்திய மாணவர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு அடுத்தபடியாக 3,17,119 மாணவர்கள் பிரித்தானியாவுக்கு படிக்கச் சென்றனர்.

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

25 690304e16a39e
அரசியல்இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஆயுதம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள்...

25 690332f7d691e
இலங்கைஉலகம்செய்திகள்

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண...

25 690349f3051fc
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் கேலிக்கூத்து நடக்கிறது; வயது முதிர்ந்த ரணிலை விடுங்கள் – டயானா கமகே

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் கட்சிக்குள் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு தலைமைப் பதவியை...