நைஜீரியாவில் இராணுவ ட்ரோன் தவறுதலாக தாக்கியதில் 85 பேர் பலி
நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள கடுனா மாகாணம் டுடுன்பிரி கிராமத்தில் இராணுவ டிரோன தவறுதலாக கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 85 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயுத கும்பல்கள் நைஜீரிய நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் செயல்பட்டு வருவதோடு அவர்களுக்கு எதிராக இராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் அந்த கிராமத்தில் பண்டிகை ஒன்றுக்காக கிராம மக்கள் ஏராளமானோர் ஒரு இடத்தில் கூடி இருந்த போது இராணுவ டிரோன் தவறுதலாக தாக்குதல் நடத்திய போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நைஜீரிய இராணுவப் பிரிவின் தலைவர் கூறுகையில், ”நைஜீரிய இராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒரு வழக்கமான பணியில் இருந்தது. ஆனால் கவனக்குறைவாக அந்த நடவடிக்கைகள் சமூகத்தினை பாதித்தது” என தெரிவித்துள்ளார்.