உலகம்செய்திகள்

ஜேர்மனியில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு அறிவிப்பு

rtjy 4 scaled
Share

ஜேர்மனியில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு அறிவிப்பு

ஜேர்மனி நாட்டில் குடியுரிமை பெறுவதையும், இரட்டை குடியுரிமையை அனுமதிப்பதையும் எளிதாக்கும் வகையிலான சட்டம் ஒன்றைக் கொண்டுவர அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், இந்த புதிய சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி ஜேர்மன் குடியுரிமை பெற காத்திருக்கும் வெளிநாட்டவர்கள் இப்போது குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவேண்டுமானால் இரண்டு நிபந்தனைகள் உண்டு முதலாவதாக, பெரும்பாலானவர்கள் எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்பதோடு ஜேர்மன் மொழித்திறனில் B1 மட்டத்தில் தகுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்.

அடுத்தபடியாக, ஜேர்மனியில் ஆறு ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், ஜேர்மன் மொழித்திறனில் B2 மட்டம் அல்லது அதைவிட அதிக தகுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்.

ஆனால் புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள சட்டத்தின் அடிப்படையில், ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்து அவர்கள் B1 மட்டத்தில் மொழித்திறன் கொண்டிருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் C1 மட்டத்தில் மொழித்திறன் கொண்டிருந்தால் மூன்று ஆண்டுகளிலேயே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் விண்ணப்பிக்க காத்திருப்போர் தேவையான ஆவணங்களை தயாராக வைத்துக்கொண்டு சட்டம் நிவைவேறும் காலம் வரை மொழித்திறனை வளர்த்துக்கொள்வது சிறந்த யோசனையாக முன்வைக்கப்படுவதோடு சட்டம் நிறைவேறியதும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...