உலகம்

72வது அழகிப்போட்டியில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற இளம்பெண்! வரலாற்று சாதனை

Published

on

72வது அழகிப்போட்டியில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற இளம்பெண்! வரலாற்று சாதனை

எல் சால்வடாரில் நடந்த அழகிப் போட்டியில் நிகரகுவாவைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.

சென்ட்ரல் அமெரிக்க நாடான எல் சால்வடாரில் 72வது ஆண்டு அழகிப் போட்டி நடைபெற்றது. சான் சால்வடார் நகரில் நடந்த இந்தப் போட்டியில் நிகரகுவாவைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ், 2023ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்றார்.

23 வயதான அவர், தாய்லாந்தின் அன்டோனியா போர்சில்டைத் (Anntonia Porsild) தோற்கடித்து மதிப்புமிக்க பட்டத்தை வென்றார்.

அவருக்கு கடந்த ஆண்டு வெற்றியாளரான ஆர்’போனி நோலா கேப்ரியல் (R’Bonney Nola Gabriel) முடிசூட்டினார்.

ஷெய்னிஸ் பலாசியோஸ் (Sheynnis Palacios) அழகிப் பட்டத்தை வென்றதன் மூலம் நிகரகுவாவில் இருந்து பட்டத்தை வென்ற முதல் பிரதிநிதி என்ற என்ற வரலாற்றை படைத்தார்.

இவர் ஏற்கனவே 2016ஆம் ஆண்டில் Miss Teen Nicaragua பட்டத்தையும், Miss Teen யுனிவர்ஸ் போட்டியில் முதல் 10 இடங்களிலும் இடம்பெற்றார்.

பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற பின்னர் ஷெய்னிஸ் தனது பதிவில், ‘இன்றிரவு எனக்குள் இருக்கும் பெண்ணுக்கும், இந்த கனவை நிறைவேற்ற ஏங்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இதனை நான் அர்ப்பணிக்கிறேன்’ என எழுதினார்.

 

Exit mobile version