உலகம்
சிரியா மீது அமெரிக்கா கடும் விமானத் தாக்குதல்
சிரியா மீது அமெரிக்கா கடும் விமானத் தாக்குதல்
சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் அமைப்புக்களின் ஆயுதக் கிடங்கு மீது அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
இரண்டு அமெரிக்க எஃப் -15 போர் விமானங்கள் சிரியாவில் குண்டுமழை பொழிந்ததாகவும், தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்க வீரர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் இராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவு அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதல் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.