8 3 scaled
உலகம்செய்திகள்

பிக் பாஸ் விட்டு வெளியேறிய பின் பிரதீப் போட்ட முதல் பதிவு

Share

பிக் பாஸ் விட்டு வெளியேறிய பின் பிரதீப் போட்ட முதல் பதிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிய பிரதீப் ஆண்டனி தற்போது ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பிக் பாஸ் குறித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து நேற்று போட்டியாளர் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். நேற்றைய முழு எபிசோட் பிரதீப் வழக்கில் தான் நகர்ந்தது. பூர்ணிமா, நிக்சன், மாயா, ஜோவிகா, விக்ரம், மணி என பலரும் பிரதீப்புடைய நடவடிக்கை சரியில்லை, அவர் பேசும் வார்த்தைகள் சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி தங்களுடைய உரிமை குரலை எழுப்பினார்கள்.

இதை விசாரித்த கமல் இறுதியில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார். பிரதீப் வெளியேறியதன் பின் சிலர் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் கூட, பலரும் அவருக்கு ஆதரவாக தான் பேசி வருகிறார்கள்.நடிகர் கவின், தொகுப்பாளினி பிரியங்கா போன்ற நட்சத்திரங்கள் இந்த முடிவு சரியில்லை என்பது போல் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் தனது டுவிட்டரில் தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது வாங்கிய “நான் பெற்ற கோப்பைகள்” என அதனை படமெடுத்து பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...

12 10
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த...

10 7
இலங்கைசெய்திகள்

35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் இராணுவத்தினரால் சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று...

6 15
இலங்கைசெய்திகள்

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை – வெளியான அறிவிப்பு

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம்...