dfsa scaled
உலகம்செய்திகள்

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் காட் என்ட்ரியாக நுழையவுள்ள விஜயகுமாரின் மகள்

Share

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் காட் என்ட்ரியாக நுழையவுள்ள விஜயகுமாரின் மகள்

சின்னத்திரையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன். இதன் ஆறு சீசன்களை கமலே தொகுத்து வழங்கிய நிலையில் ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்கி வருகின்றார். 7வது சீசன் ஆரம்பித்து 24 நாட்களைக் கடந்துள்ளது. இதுவரை நிகழ்ச்சியிலிருந்து மூன்று பேர் வெளியேறியுள்ளனர்.

அதன்படி இறுதியாக விஜய் வர்மா வெளியேறியிருந்தார். நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்கிடையில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் மணி மற்றும் ரவீனாவின் காதலும் ரசிகர்களை சலிப்படைச் செய்துள்ளது.

மேலும் வைல்ட்காட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் 5 பேர் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி அதில் என்ட்ரி கொடுக்கவுள்ள மூன்று பேர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பாடகி மானசி,விஜே அர்ச்சனா,பிஷ்னஸ்மேன் ஷாம் ஷாமுவேல்ஸ் ஆகியோரே என்ட்ரி கொடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகை ஸ்ரீதேவி வைல்ட்காட் என்ட்ரியாக நுழையவுள்ளதாக கூறப்படுகின்றது.ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இவருடைய மகளான ஜோவிதாவும் உள்ளே இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...