தள்ளாடிய ஜோ பைடன்: நடித்த டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை போல் நடித்து காட்டிய காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் தயாராகி வருகிறார்.
இருப்பினும், அவர் தற்போது சட்டரீதியான சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளார்.
இதன்படி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அடிக்கடி தனது உரைக்குப் பிறகு, மேடையில் இருந்து கீழே இறங்க தள்ளாடுவதை கேலி செய்யும் விதமாக ட்ரம்ப் நடித்து காட்டிய காணொளி சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நியூ ஹாம்ப்ஷயரின் டெர்ரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்று உரை நிகழ்த்திய போதே இவ்வாறு நடித்துக்காட்டியுள்ளார்.