உலகம்
ஹமாசுக்கு எதிரான போரில் பிரான்ஸ் ஒன்றிணையும் – பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
ஹமாசுக்கு எதிரான போரில் பிரான்ஸ் ஒன்றிணையும் – பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்று இஸ்ரேல் சென்றடைந்து அந்நாட்டு அதிபர் ஹெர்சாகை சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.
போர் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடங்கினர்.
இதையடுத்து உடனடியாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.
ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து செயல்படும் இடம் என தெரிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதன்போது இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் காசா நகரம் முழுவதும் சூறையாடப்பட்டது.
மேலும், நேற்றைய 17 வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இஸ்ரேல் சென்றுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இஸ்ரேல் சென்றுள்ளார்.
இதன்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவைச் சந்தித்துள்ளார். பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும், பிரான்சுக்கும் பயங்கரவாதம் என்பது பொது எதிரி தான். இதில் இஸ்ரேல் தனியாக இல்லை.
I.S. பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தவர்கள் ஹமாசுக்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும்.
I.S.I.S. பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் உலக அளவில் ஒன்றிணைந்தது போலவே, ஹமாசுக்கு எதிரான போரிலும் பிரான்ஸ் ஒன்றிணையும்.
மேலும் பாலஸ்தீன பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் இஸ்ரேல் தீர்வு கண்டால் மாத்திரமே மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி என்பது ஏற்படும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.