6 8 scaled
உலகம்செய்திகள்

அந்த செய்தியால் அதிர்ச்சியடைந்து கலக்கமடைந்துள்ளேன்! ஜஸ்டின் ட்ரூடோ

Share

அந்த செய்தியால் அதிர்ச்சியடைந்து கலக்கமடைந்துள்ளேன்! ஜஸ்டின் ட்ரூடோ

பெல்ஜியத்தில் இருவர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நடந்த சுவீடன் – பெல்ஜியம் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குழுமியிருந்தனர்.

சில ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.

இதில் இரண்டு ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு இதனை நிகழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

‘பெல்ஜியத்தில் இருந்து வந்த செய்தியால் நான் அதிர்ச்சியடைந்து கலக்கமடைந்தேன், மேலும் யாருடைய அன்புக்குரியவர்கள் அர்த்தமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கனேடியர்கள் நம் பெல்ஜியம் மற்றும் சுவீடிஷ் நண்பர்களுக்காக உடன் நிற்கிறோம் – மேலும் உலகெங்கிலும் உள்ள மக்களுடனும் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக நிற்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...