உலகம்
23 ஆண்டுகளுக்கு பிறகும் உலகை உலுக்கும் புகைப்படம்
23 ஆண்டுகளுக்கு பிறகும் உலகை உலுக்கும் புகைப்படம்
காசா பகுதியை சேர்ந்த Jamal Al-Durrah என்பவர் தொடர்பிலான புகைப்படம் ஒன்று 23 ஆண்டுகளுக்கு பின்னரும் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், இதுபோன்றதொரு நெருக்கடியான சூழலில் ஜமால், இரு தரப்பு துப்பாக்கி சண்டை இடையே தமது 11 வயது மகன் முகமதுவுடன் தனியாக சிக்கிக்கொண்டார்.
இரு தரப்பு துப்பாக்கி சண்டையில் சிக்கிய ஜமால் தமது மகனை காப்பாற்ற போராடியுள்ளார். குறித்த சம்பவத்தை அப்போது களத்தில் இருந்த பிரான்ஸ் ஊடகவியளாளர் ஒருவர் பதிவு செய்து பின்னர் வெளியிட்டிருந்தார்.
11 வயதான முகமது தமது தந்தையின் பின்னால் மறைந்து கொண்டு பயத்தில் அழுதபடி இருந்துள்ளார். சில நொடிகளில் துப்பாக்கி வெடிக்க,முகமது குண்டடிபட்டு ஜமாலின் மடியில் சுருண்டு விழுந்துள்ளார். பின்னர் காயங்கள் காரணமாக அந்த 11 வயது சிறுவன் பலியானான்.
இரு நாடுகளுக்கும் இடையேயான போரின் கொடூரத்தை அந்த புகைப்படம் உலக மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டியது. பாலஸ்தீன மக்களின் இரண்டாவது எழுச்சி என்பது 2005ல் முடிவுக்கு வந்தது.
இஸ்ரேல் தரப்பில் இறப்பு எண்ணிக்கை 1,000 கடக்க, பாலஸ்தீன தரப்பில் 3,000 பேர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 7ம் திகதி ஆரம்பமான இஸ்ரேலின் கொடூர தாக்குதலில்,ஜமால் நான்கு குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரினால் இரு தரப்பிலிருந்தும் பொதுமக்களும் சிறார்களுமே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதுவரையான தரவுகளின்படி, பேரிழப்புகளை பாலஸ்தீன மக்களே எதிர்கொண்டுள்ளனர்.
காசா பகுதியில் மட்டும் இதுவரை பலி எண்ணிக்கை 2,500 கடந்துள்ளது. இஸ்ரேலியர்கள் எப்போதும் ஹமாஸ் படைகளை குறிவைப்பதில்லை என ஜமால் கொந்தளித்துள்ளார்.
இராணுவ தளவாடங்கள் மீது குறி வைக்காத இஸ்ரேல் படைகள் அப்பாவி மக்களின் குடியிருப்புகள் மீது மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை இரக்கமின்றி பயன்படுத்தி வருவதாக ஜமால் தெரிவித்துள்ளார்.