coping with Patient death
உலகம்செய்திகள்

தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

Share

தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை தனது தந்தையுடன் சேர்ந்து கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஜஜ்மன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ். இவருக்கும் அனிதா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது.

அதன் பின்னர் சூரஜ் தன் மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். அவர் மட்டும் இல்லாமல் மொத்த குடும்பமும் இருசக்கர வாகனம் கேட்டு அனிதாவை தொல்லை செய்துள்ளனர்.

தொடர் துன்புறுத்தலுக்கு ஆளான அனிதா கொல்லப்பட்டுள்ளார். அவரது கணவர் சூரஜ் தனது தந்தையுடன் சேர்ந்து அடித்து கொன்றுள்ளனர்.

அதன் பின்னர் அவரது உடலை வீட்டிற்கு அருகிலேயே புதைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மோப்ப நாய் உதவியுடன் அனிதாவின் உடலைக் கைப்பற்றியுள்ளார்.

பொலிஸார் தேடுதல் வேட்டை பின்னர் அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து தப்பியோடிய சூரஜ் குடும்பத்தினரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவர்கள் மீது வரதட்சணை, துன்புறுத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரதட்சணைக்காக இளம்பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு...

25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து...