உலகம்

பெற்ற மகளை வீட்டைவிட்டு துரத்திய தாய்: சிறுமிக்கு ஏற்பட்ட நிலை

Published

on

பெற்ற மகளை வீட்டைவிட்டு துரத்திய தாய்: சிறுமிக்கு ஏற்பட்ட நிலை

பெற்ற மகளை ஒரு பெண் வீட்டை விட்டுத் துரத்திய நிலையில், அந்த சிறுமி, சீரழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Kansas மாகாணத்தில், வீடற்றோர் வாழும் ஒரு இடத்துக்கு அருகே, Zoey Felix என்னும் ஐந்து வயதுச் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள்.

உடற்கூறு ஆய்வில், அவள் வன்புணரப்பட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது. தொடர் விசாரணைகள், அதிர்ச்சியளிக்கும் பல தகவல்களை வெளிக்கொணர்ந்தன.

Zoeyயை, அவளைப் பெற்ற தாயே வீட்டை விட்டுத் துரத்தியுள்ளார். Zoey, அவளது தந்தை மற்றும் Mickel Wayne Cherry (25) என்னும் ஒருவர், ஆகிய அனைவரும் ஒரே முகவரியில்தான் வசித்துவந்துள்ளார்கள்.

சில வாரங்களுக்கு முன், Zoeyயின் தாயாகிய Holly Jo Felix (36), அவர்கள் மூன்று பேரையும் வீட்டை விட்டுத் துரத்த, அவர்கள் மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில்தான் கடந்த சில வாரங்களாக வாழ்ந்துவந்துள்ளார்கள்.

இந்நிலையில், Mickel கைது செய்யப்பட்டுள்ளார். Zoeyயை வன்புணர்ந்து கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொலிசார் விசாரணையில், Zoeyயை எப்போதுமே அக்கம் பக்கத்தவர்கள்தான் அழைத்து, குளிக்கவைத்து, புது ஆடைகள் வாங்கிக் கொடுப்பார்கள் என்பது தெரியவந்துள்ளது. வெளியாகியுள்ள புகைப்படங்கள் கூட, அப்படி புது ஆடை வாங்கி கொடுத்தவர்கள் எடுத்த புகைப்படம்தானாம். அவளது பெற்றோரைத் தவிர அந்த பகுதியிலுள்ள அனைவருமே Zoey மீது அன்புவைத்திருந்தார்கள், அவளை கவனித்துக்கொண்டார்கள் என்கிறார், அந்த பகுதியிலுள்ள ஒரு வீட்டில் வாழும் Sheryl என்னும் பெண்.

அக்கம்பக்கத்தவர்கள் Zoeyயை அழைத்து அவளுக்கு உதவிகள் செய்யும்போது, இன்று ஒரு நாள் மட்டும் நான் உங்கள் வீட்டில் தங்கட்டுமா, பிளீஸ் என்று கேட்பாளாம் Zoey.

அப்படி ஒரு குழந்தை கேட்டாலே, அவள் வீட்டில் ஏதோ பிரச்சினை என்றுதான் பொருள் என்கிறார் அந்த பகுதியில் வாழும் Shaniqua Bradley என்னும் பெண். பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Exit mobile version