உலகம்

ஹமாஸ் படைகளுக்கு உதவ தயார்! ஈரான், ஈராக், மற்றும் ஜோர்டான் நாடுகளிடம் தாலிபான்கள் கோரிக்கை

Published

on

ஹமாஸ் படைகளுக்கு உதவ தயார்! ஈரான், ஈராக், மற்றும் ஜோர்டான் நாடுகளிடம் தாலிபான்கள் கோரிக்கை

இஸ்ரேலுக்குள் சென்று ஹமாஸ் படைகளுக்கு உதவ ஈரான், ஈராக், மற்றும் ஜோர்டான் நாடுகள் அனுமதி வழங்க வேண்டும் என தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்ரேலை குறி வைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் கிட்டத்தட்ட 5000 ஏவுகணைகளை இன்று அதிகாலை ஏவி தாக்குதல் நடத்தினர்.

இதில் 250க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய நாட்டினரை பிணைக் கைதிகளாக பிடித்து காசாவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இஸ்ரேல் ஏற்கனவே பதில் தாக்குதலை தொடங்கிவிட்ட நிலையில்,மேலும்  நாட்டின் ஒட்டுமொத்த படைகளையும் போர் முனையில்களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலுக்குள் சென்று ஹமாஸ் படைகளுக்கு உதவ ஈரான், ஈராக், மற்றும் ஜோர்டான் வழியமைத்து கொடுத்து உதவுங்கள் என தாலிபான்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் ஜெருசலேம் நகரை கைப்பற்ற தாலிபான்கள் ஹமாஸ் படையினருக்கு உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருப்பதாக ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version