உலகம்
காணாமல் போன இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்களின் புகைப்படங்கள்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
காணாமல் போன இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்களின் புகைப்படங்கள்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
இஸ்ரேல் ராணுவத்தில் சேவை புரிந்து வந்த காணாமல் போன பெண் ராணுவ வீரர்களின் பெயர் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் தற்போது தீவிரமான சண்டை நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலிய பகுதிக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், பெண் ராணுவ வீரர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்களை காசா பகுதிக்கு பிணைக் கைதிகளாக கடத்தி சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடங்கிய பிறகு இஸ்ரேலிய ராணுவ படையில் சேவையாற்றிய பல பெண் ராணுவ வீரர்கள் காணாமல் போய் உள்ளனர்.
அந்த வகையில் ஹமாஸ் படையினர் தாக்குதலில் இறங்கிய பிறகு காணாமல் போன இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதையடுத்து காணாமல் போன பெண் இஸ்ரேலிய ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் குறித்த தகவலை தெரிவிக்குமாறு மன்றாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஹமாஸ் படைகளை அழிக்க இஸ்ரேல் ராணுவம் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தும் என அந்த நாட்டின் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அத்துடன் காசா பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறும், இந்த கருப்பு நாளுக்கு பழிவாங்கும் விதமாக அந்த நகரம் இடிபாடுகளின் நகரமாக மாற்றப்படும் எனவும் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஹமாஸுக்கு எதிரான போர் நீண்ட நேரம் எடுக்கும் என்றும், கடினமாக இருக்கும் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.