உலகம்

சின்னஞ்சிறுசுகளின் ஆசையை நிறைவேற்றி வைத்த நடிகர் சூரி- வைரலாகி வரும் வீடியோ

Published

on

சின்னஞ்சிறுசுகளின் ஆசையை நிறைவேற்றி வைத்த நடிகர் சூரி- வைரலாகி வரும் வீடியோ

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வருபவர் தான் நடிகர் சூரி. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விடுதலை திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. வழக்கமாக காமெடி வேடங்களில் நடித்து வந்த சூரி, இப்படத்தில் அதிலிருந்து வேறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது. இதனை அடுத்து கொட்டுக்காளி என்கிற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.இப்படத்தினை இயக்குநர் வினோத் என்பவர் இயக்கியுள்ளார்.இப்படத்தின் ஷுட்டிங் அண்மையில் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகக் காத்திருக்கின்றது.

இதுதவிர துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் ஹீரோவாக சூரி நடித்து வருகின்றார். இதில் ரோஷினி, பிரிகிடா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி செம்ம பிசியான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூரி, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

அதன்படி படப்பிடிப்பு ஒன்றிற்காக கிராமத்திற்கு சென்ற சூரி, அங்கு தன்னுடைய கேரவனில் இருந்தபோது அவரை பார்க்க சிறுவர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அனைவரும் சூரியின் கேரவனை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டனர். இதற்கு உடனே அனைவரையும் கேரவனுக்குள் அழைத்து சுற்றிக்காட்டிய சூரி, அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். மகிழ்வித்து மகிழ்ந்த தருணம் என குறிப்பிட்டு சூரி பதிவிட்டுள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Exit mobile version