உலகம்செய்திகள்

ஒரே வகுப்பில் படிக்கும் 5 இரட்டையர்கள்: ஆசிரியர்கள் குழம்பும்

Share
23 65213a7f09ae0
Share

ஒரே வகுப்பில் படிக்கும் 5 இரட்டையர்கள்: ஆசிரியர்கள் குழம்பும்

இந்திய மாநிலம், கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரே வகுப்பில் 5 இரட்டையர்கள் படிப்பதால், அடையாளம் காண முடியாமல் ஆசிரியர்கள் குழம்புகின்றனர்.

கர்நாடக மாநிலம் பந்துவால் தாலுகாவில் உள்ள சஜிபமுடாவில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், வரலாறு காண முடியாத அளவுக்கு அதிகமான இரட்டையர்கள் படித்து வருகின்றனர்.

அந்தவகையில், 9-ம் வகுப்பில் 62 மாணவர்கள் உள்ளனர். இதில், 5 இரட்டையர்கள் படிக்கின்றனர். 2010-11 -ம் ஆண்டு பிறந்த பாத்திமா ரவுலா-ஆயிஷா ரைஃபா, ஹலிமத் ரஃபியா-துலைகத் ரூபியா, பாத்திமா கமிலா-பாத்திமா சமிலா, கதீஜா ஜியா-ஆயிஷா ஜிபா, ஜான்வி-ஷ்ரனாவி ஆகிய இரட்டையர்கள் பார்ப்பதற்கு ஒரே போல இருக்கின்றனர். இந்த 5 இரட்டையர்களும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரட்டையர்களால், அவர்களை அடையாளம் காண்பதற்கு ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடும் சவாலாக இருக்கிறது. இவர்களின், பெயர்களை ஆசிரியர்கள் நினைவு வைத்திருந்தாலும், தினமும் போராடுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், சக மாணவர்களும் எங்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுகின்றனர் என இரட்டையர்கள் கூறுகின்றனர். தற்போது, இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...