ஜப்பானில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை

rtjy 54

ஜப்பானில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோரிஷிமா தீவுக்கு அருகில் இன்று (05.10.2023) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோவிற்கு தெற்கே 550 கிமீ தொலைவில் பசுபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள இசு தீபகற்பத்தில் உள்ள தீவுகளில் 30 சென்ரி மீற்றர் முதல் – 1 மீற்றர் உயரம் வரை சுனாமி அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு டோங்கா-ஹுங்கா ஹாபாய் எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமிக்குப் பிறகு இஸூ தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Exit mobile version