மீண்டும் முன்னாள் கணவருடன் இணைந்துவிட்டாரா சமந்தா! கடுப்பான நடிகை
சமந்தா – நாகசைதன்யா கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நான்கு ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர்.
சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தபோது ஒரு நாய் குட்டியை வளர்த்து வந்துள்ளனர். அந்த நாய் குட்டியின் பெயர் சாஷ். பிரிவுக்கு பின் நாய் குட்டியை சமந்தா தன்னுடன் கொண்டு சென்று வளர்த்து வருகிறார்.
சமந்தாவின் பெரும்பாலான புகைப்படங்களில் சாஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் இருக்கும். அதை நாம் தொடர்ந்து அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில், நடிகர் நாகசைதன்யாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அந்த நாய் குட்டி சாஷ் இடம்பெற்றுள்ளது.
இதை கவனித்த ரசிகர்கள், சமந்தா வளர்த்து வரும் நாய்க்குட்டி நாகசைதன்யாவிடம் இருக்கிறது. இருவரும் மீண்டும் இணைந்துவிட்டீர்களா என சமந்தாவிடம் கேள்வி எழுப்பியும், சில கேலி கிண்டல் செய்யும் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.
இதனால் கடுப்பான சமந்தா ‘உங்களுக்கு அறிவு இல்லையா, வேலையில்லாமல் இருக்குறீர்களா. அப்படி சும்மா இருந்தால் எதாவது புத்தகத்தை எடுத்து படியுங்கள். அறிவாவது வளரும்’ என கோபத்துடன் பேசியுள்ளார்.