ஜோவிகாவை முகம் சுளிக்க வைத்த விஷ்ணு… அம்பலமாகும் ரவீனாவின் காதல் கதை
பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகும் ஒரு ஷோ தான் ‘பிக்பாஸ்‘. அந்தவகையில் இன்றைய தினத்திற்கான முதலாவது ப்ரோமோவில் விசித்திராவிற்கும், ஆனந்திற்கும் இடையே சிறிய வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் வர்மாவிற்கும் பிரதீப் ஆண்டனிக்கும் இடையில் மோதல் வெடித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது 3-ஆவது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் இந்த வார டாஸ்க்கு கொடுக்கப்படுகின்றது. அந்தவகையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் குறித்து 3கிசுகிசுக்களை சரியாக கண்டுபிடித்து கற்பனை கலந்த ஒரு கதையாக சொல்ல வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து ஒவ்வொருவரும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் விஷ்ணு ஜோவிகா குறித்துப் பேசுகையில் “ரியல் லைபில் நடிக்கிறேன்னு விளையாட்டுக்கு சொன்னால் கூட எனக்கு ட்ரிக்கர் பண்ணும்” எனக் கூறுகின்றார். இதனைக் கேட்டதும் ஜோவிகா வாயை சுளிக்கின்றார்.
பின்னர் சரவண விக்ரம் பற்றி அக்ஷயா உதயகுமார் கூறுகையில் “லவ் பண்ண மாட்டேன் என்று இருப்பாங்க, ஒரு பொண்ணு வருது..” என்று சொல்லி இழுக்கின்றார். அத்தோடு இன்னொருவர் “எக்ஸ் பாய் ப்ரண்டும், லவ்வரும் பிறந்தநாள் சர்ப்பிரைஸில் கலந்து கிட்டதால் இரண்டும் பிரேக் அப் ஆன நிலமை” எனக்கூறி ரவீனா தாஹாவின் காதல் கதை பற்றி போட்டுடைக்கின்றார்.
இதனைக் கேட்டதும் மணி சர்மா ஆழ்ந்த யோசனையில் இருக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது