6 2 scaled
உலகம்செய்திகள்

சில நாட்களில் நீ இறந்துவிடுவாய் என்று கூறிய ஜோசியம் பார்க்கும் பெண்: நடந்த பயங்கரம்

Share

சில நாட்களில் நீ இறந்துவிடுவாய் என்று கூறிய ஜோசியம் பார்க்கும் பெண்: நடந்த பயங்கரம்

அழகிய இளம்பெண் ஒருவருக்கு ஜோசியம் பார்த்த பெண் ஒருவர், நீ இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவாய் என்று கூற, அந்த பெண் அடுத்த நாளே இறந்துவிட்டார்.

அந்த விடயம் பெரும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

பிரேசில் நாட்டவரான பின்டோ (Fernanda Silva Valoz da Cruz Pinto, 27) என்னும் இளம்பெண், Maceió என்னும் இடத்திலுள்ள மால் ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

அந்த இடம் ஜோசியம் பார்ப்பவர்கள் அதிகம் காணப்படும் ஒரு இடமாம். நடந்து சென்றுகொண்டிருந்த பின்டோவை அழைத்த வயதான ஜோசியம் பார்க்கும் பெண்மணி ஒருவர், அவருக்கு ஜோசியம் பார்ப்பதாகக் கூற, அவரிடம் கையை நீட்டியுள்ளார் பின்டோ.

பின்டோவின் கையைப் பார்த்த அந்த பெண்மணி, நீ இன்னும் சில நாட்கள்தான் வாழ்வாய் என்று கூறியிருக்கிறார். பின்டோ புறப்படும்போது, அந்தப் பெண்மணி ஒரு சாக்லேட்டை அவருக்குக் கொடுக்க, அதை வாங்கிய பின்டோ, பசியாக இருந்ததால் அதை சாப்பிட்டிருக்கிறார்.

சிறிது நேரத்தில், பின்டோவின் கண் பார்வை மங்கி, தலைசுற்றலும் வாந்தியும் ஏற்பட, தன் உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளார் அவர்.

அந்த உறவினர் பின்டோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அதற்குள் பின்டோவின் மூக்கிலிருந்து இரத்தம் வழியத் துவங்கியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்டோ, மறுநாள் உயிரிழந்துவிட்டார்.

உயிரிழந்த பின்டோவுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள், பின்டோவின் உடலில் நஞ்சு இருந்ததை வெளிப்படுத்தியுள்ளன.

பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் இரண்டு நச்சு ரசாயனங்கள் பின்டோவின் உடலில் இருந்தது தெரியவந்துள்ளது.

விடயம் என்னவென்றால், அந்த பெண்மணி கொடுத்த சாக்லேட்டில்தான் அந்த நச்சுப் பொருட்கள் இருந்தனவா என்பதை ஆய்வு முடிவுகளால் உறுதி செய்ய முடியவில்லை.

அத்துடன் பின்டோவுக்கு சாக்லேட் கொடுத்த ஜோசியக்காரப் பெண்மணியையும் கண்டுபிடிக்கமுடியாததால், பின்டோவின் மரணத்துக்குக் காரணம் கண்டுபிடிக்கமுடியாமல் பொலிசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...