உலகம்
இதுவரை விஷாலின் திரை வாழ்க்கையில் கண்டிராத வசூல் சாதனை
இதுவரை விஷாலின் திரை வாழ்க்கையில் கண்டிராத வசூல் சாதனை
இறும்திரை படத்திற்கு விஷாலின் ரசிகர்கள் கொண்டாடி வரும் திரைப்படம் என்றால் அது மார்க் ஆண்டனி தான். பல ஆண்டுகளாக இதற்காக தான் அவர்கள் காத்துகொண்டு இருந்தனர்.
முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படத்தின் வெற்றி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீது இதுவரை அனைவருக்கும் இருந்த பார்வையை அப்படியே ஒட்டுமொத்தமாக மாற்றியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட ஆதிக் ரவிச்சந்திரனை நேரில் அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் வெளிவந்து 16 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இ துவே விஷாலின் திரை வாழ்க்கையில் ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படமாகும். அதை மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு செய்து கொடுத்துள்ளது. இப்படம் ரூ. 100 கோடியை கடந்த நிலையில், ரசிகர்கள் இதை சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.