உலகம்

ஜேர்மானியரின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தை மரணம்

Published

on

ஜேர்மானியரின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தை மரணம்

ஜேர்மானியர் ஒருவருடைய கட்டுப்பாட்டில் இருந்த 20 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மானியர் ஒருவருடைய காதலியின் குழந்தை அவரது கட்டுப்பாட்டிலிருந்த நிலையில் உயிரிழந்துள்ளது. பல முறை அவர் அந்த 20 மாதக் குழந்தையைத் தாக்கியதும், பலமாக குலுக்கியதும் தெரியவந்துள்ளது.

மூளையில் காயம் ஏற்பட்டு அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்டது. உடற்கூறாய்வில், அந்தக் குழந்தையின் நெஞ்சுப் பகுதியின் பின்னாலுள்ள முகுகெலும்பு உடைந்திருந்ததும், கடுமையான தாக்குதல் காரணமாக அந்தக் குழந்தை உயிரிழந்திருந்ததும் தெரியவந்தது.

அந்த 28 வயது இளைஞர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த நிலையில், Winterthur மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள், 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், அவரது தண்டனைக்காலம் முடிவடைந்ததும், அவரை நாடுகடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version