rrrrrr scaled
உலகம்செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான ஆதாரம் எவ்வளவு வலுவானதா? கனடா பிரதமர் பதில்

Share

இந்தியாவுக்கு எதிரான ஆதாரம் எவ்வளவு வலுவானதா? கனடா பிரதமர் பதில்

கனடாவில், கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக எவ்வளவு வலுமான ஆதாரம் உள்ளது என கேட்கப்பட்ட கேள்விக்கு கனடா பிரதமர் நேரடியாக பதிலளிக்கவில்லை.

G 20 உச்சி மாநாட்டுக்காக இந்தியாவுக்குச் சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கனடாவில் காலிஸ்தான் அமைப்பினர் இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துதல், தூதரக அதிகாரிகளுக்கெதிரான வன்முறை முதலான விடயங்கள் குறித்துப் பேச, கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

நாடு திரும்பிய ட்ரூடோ, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

அதைத்தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, கனடாவிலிருந்து வெளியேற கனடா உத்தரவிட்டது. கனடா இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியதற்கு பதிலடியாக, கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை இந்தியா வெளியேற்றியது.

இந்நிலையில், நேற்று நியூயார்க்கில் ஊடகவியலாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மீண்டும் இந்தியா மீது குற்றம் சாட்டினார். நான் திங்கட்கிழமை கூறியதுபோல, கனேடியர் ஒருவர் கனடா மண்ணில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா உள்ளது என்பதை நம்புவதற்கு நம்பத்தக்க ஆதாரங்கள் உள்ளன என்றார்.

அப்போது ஊடகவியலாளர் ஒருவர், ட்ரூடோவிடம், இந்தியாவுக்கு எதிரான ஆதாரம் எவ்வளவு பெரியது, எந்த அளவுக்கு வலுவானது என்று கேள்வி எழுப்பினார்.

அந்த ஊடகவியலாளரின் கேள்விக்கு கனடா பிரதமர் நேரடியாக பதிலளிக்கவில்லை. கனடாவுக்கு கடுமையான மற்றும் சுதந்திரமாக செயல்படும் நீதி அமைப்பு உள்ளது. நீதித்துறையின் செயல்பாடுகளை செயல்படுத்தி உண்மைகளை வெளிக்கொணர, நாங்கள் நீதி அமைப்பை அனுமதிக்கிறோம் என்றார்.

இதற்கிடையில், கனடா பிரதமரின் பேட்டிக்கு சில மணி நேரம் முன்பு, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Arindam Bagchi, எங்களுக்கு அளிக்கப்படும் எந்த குறிப்பிட்ட தகவலையும் பார்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அப்படி எந்த தகவலும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கோட்மலையில் வேன் 70 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்!

நுவரெலியா – கம்பொலை பிரதான வீதியில் கோட்மலை, கெராண்டி எல்லா பகுதிக்கு அருகே இன்று (ஏப்ரல்...

Untitled 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்லேகெலேவில் கோர விபத்து: பாடசாலை கிரிக்கெட் போட்டி ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மாணவர் உயிரிழப்பு!

கண்டி – திகானா பிரதான வீதியில் பல்லேகெலே இராணுவ முகாமிற்கு அருகில் இன்று (ஏப்ரல் 02,...

Untitled 46
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பு சந்திப்பு!

தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பின் (TPA) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட அதன் உயர்மட்ட...