அரசியல்

பணிப்பெண் செய்த செயல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published

on

பணிப்பெண் செய்த செயல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சுவிட்சர்லாந்தில், குழந்தை ஒன்றை கவனித்துக்கொள்வதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட பெண் ஒருவர், குழந்தை தொல்லை கொடுத்ததால் வெறுப்படைந்து அதை பலமாக உலுக்கியதில், குழந்தை உயிரிழந்துவிட்டது.

2018ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், குழந்தை ஒன்றை கவனித்துக்கொள்வதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட பெண் ஒருவர், குழந்தை தொல்லை கொடுத்ததால் வெறுப்படைந்து அதை பலமாக உலுக்கியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை மூன்று நாட்களில் உயிரிழந்துவிட்டது. தன் தவறை அந்த பெண் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர் சிறை செல்வது இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அந்தப் பெண் மீண்டும் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார். அதாவது, அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதல்ல என்று கூறி, மீண்டும் அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்தியுள்ளார்கள்.

இன்னும் சில வாரங்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், தீர்ப்பு மாறுமா, அவர் சிறை செல்வாரா அல்லது மீண்டும் சிறை செல்வது ஒத்திவைக்கப்படுமா என்பது தெரியவில்லை.

Exit mobile version