உலகம்
ஜப்பானில் 10 ஒருவர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்: வீழ்ச்சியில் இளைஞர்கள் தொகை
ஜப்பானில் 10 ஒருவர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்: வீழ்ச்சியில் இளைஞர்கள் தொகை
முதன்முறையாக ஜப்பானில் 10 பேரில் ஒருவர் 80 வயதிற்கு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருப்பதாக புள்ளி விவரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான குழந்தைகள் பிறப்பு விகிதத்தை கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் கூற்றுப்படி, 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் விகிதத்தை கொண்டு ஜப்பான் உலகின் மிக வயதான மக்கள் தொகை கொண்ட நாடு என தெரிவித்துள்ளது.
சுமார் 125 மில்லியன் மக்கள் தொகையில் 29.1% பேர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருப்பதாக ஜப்பானின் தேசிய தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.
தேசிய மக்கள் தொகை மற்றும் சமூக பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல் படி, 2040ம் ஆண்டுக்குள் ஜப்பானில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 34.8% ஆக இருக்கும் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் ஜனவரி மாதம் நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் மக்களால் சமூகமாக செயல்பட முடியாத நிலையில் இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
ஜப்பானை தொடர்ந்து இத்தாலி முதியவர்கள் மக்கள் தொகை 24.5%, பின்லாந்து 23.6% ஆக உள்ளது, இதுவே உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வயது முதியவரின் நாடுகளின் வரிசையில் உள்ளது.