உலகம்

மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கிய பிரித்தானிய நகரம்! வெளியிட்ட எச்சரிக்கை

Published

on

மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கிய பிரித்தானிய நகரம்! வெளியிட்ட எச்சரிக்கை

பிரித்தானியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு காரணமாக நகரமொன்று நீரில் மூழ்கியுள்ளது.

தென்மேற்கு இங்கிலாந்து மக்களுக்கனா அரிதாக அம்பர் வானிலை எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டிருந்தது. இரண்டு வாரங்களுக்கான மழை மொத்தமாக ஒரு மணி நேரத்தில் பெய்துள்ளதாகவும் வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாவ்லிஷில் அமைந்துள்ள கடலோர டெவோன் நகரத்தில் வசிப்பவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய சாலைகள் பழுப்பு நிற மழைநீரால் நிரம்பி வழிகின்றன.

ஞாயிறன்று மதியத்திற்கு மேல் சுமார் 5.30 மணியளவில் அம்பர் வானிலை எச்சரிக்கை வெளியிடப்பட்டது. இதனிடையே எக்ஸெட்டர் விமான நிலைய டெர்மினல் வெள்ளத்தில் மூழ்கியதால் பயணிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இதனையடுத்து பல எண்ணிக்கையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. விமான நிலைய அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில், இன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து, எக்ஸெட்டர் விமான நிலைய முனையத்தை வெள்ளம் பாதித்ததால் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் சில பகுதிகளில் மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று மதியம் 1 மணி முதல் திகட்கிழமை காலை 6 மணி வரை இந்த மஞ்சள் எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்றே கூறப்பட்டது.

Exit mobile version