உலகம்
நாடு ஒன்றில் காட்டுத்தீயாய் பரவும் டெங்கு காய்ச்சல்: 778 பேர் பலி
நாடு ஒன்றில் காட்டுத்தீயாய் பரவும் டெங்கு காய்ச்சல்: 778 பேர் பலி
வங்கதேசத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் இதுவரை 778 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்
வங்கதேச நாட்டில் அதிர்ச்சி தரும் வகையில் படுவேகமாக டெங்கு காய்ச்சலானது பரவி வருகிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு வங்கதேச நாட்டில் 778 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் தான் இந்த டெங்கு காய்ச்சல் தொற்றானது அதிகரித்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் டெங்கு பாதிப்புகள் முறையாக பதிவு செய்யப்படவில்லை, அவ்வாறு செய்யப்பட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தற்போது உள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்களை விட அதிகமாக இருக்கும் என்று ஐ.நா சிறுவர்கள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் சரியான டெங்கு ஒழிப்பு கொள்கைகள் இல்லாததே இவ்வளவு பெரிய நெருக்கடியை வங்கதேசம் சந்திப்பதற்கான முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.
அத்துடன் இங்குள்ள பல பேருக்கு டெங்கு பாதிப்பிற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டாக்காவிற்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் இருக்கும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு டெங்கு ஒழிப்பு குறித்த போதிய பயிற்சிகள் வேண்டும் என்று டாக்கா மூத்தா மருத்துவர் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் முகமது நியாதுஸ்மான் தெரிவித்துள்ளார்.