உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கிய தமிழர்!

Published

on

அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கிய தமிழர்!

அமெரிக்க ஜனாதிபதியாக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசின் செலவீனங்களை குறைக்கும் வகையில் பல்வேறு அரச நிறுவனங்களை மூடுவதோடு, 75 சதவீதத்துக்கும் அதிகமான அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

குடியரசுக்கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து போட்டியிடக்கூடாது என ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதுடன், குடியரசு கட்சியினரின் ஆதரவினை பெற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களை மூடும் திட்டம் உள்ளது. எப்.பி.ஐ. என்று அழைக்கப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு, கல்வித்துறை, மது, புகையிலை, துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பணியகம், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களை மூடும் திட்டம் உள்ளது.

மேலும், 4 ஆண்டு பதவி காலத்துக்குள் 22 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் அரசு பணியாளர்களின் எண்ணிக்கையில் 75 சதவீதத்தை குறைப்பதே தனது இறுதி இலக்காக இருக்கும் என்றும் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version