சகோதரருடன் லண்டன் பூங்காவில் விளையாடிய சிறுவன்: கோர சம்பவம்
கிழக்கு லண்டன் பூங்காவில் சகோதரருடன் விளையாட்டில் ஈடுபட்டிருந்த 4 வயது சிறுவனை XL Bully கொடூரமாக தாக்கியதில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 6.30 மணியளவில் நியூஹாம் பகுதியில் குறித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. 4 வயதேயான நெஹால் இஸ்லாம் தற்போது ஆழமான காயங்களுக்காக அறுவை சிகிச்சையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளார்.
சம்பவத்தின் போது நெஹால் அவரது தந்தை மற்றும் சகோதரருடன் அந்த பூங்காவில் இருந்துள்ளார். நடந்தவற்றை நேரில் பார்த்த 11 வயது நபில் இஸ்லாம் தெரிவிக்கையில், சகோதரருடன் விளையாடிக் கொண்டிருந்தபோது பூங்காவின் மூலையில் நாய்கள் கூட்டம் இருப்பதைக் கவனித்ததாகவும்,
அதில் இரண்டு சிறிய நாய்கள் ஒரு கயிற்றில் கட்டப்பட்ட நிலையில் இருந்தன எனவும், ஆனால் மிகப் பெரிய ஒன்று சுதந்திரமாக ஓடுவதை பார்க்க முடிந்தது எனவும் நபில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும்
இந்த நிலையில் தான் அந்த பெரிய நாய் திடீரென்று தங்களை துரத்த தொடங்கியது எனவும், உண்மையில் அந்த நாய் என்னைப் போன்ற அளவில் இருந்தது எனவும் நபில் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
திடீரென்று நெஹாலை தாக்கிய அந்த நாய், காலை கவ்வி குதறியதாகவும் நபில் தெரிவித்துள்ளார். ஒருவழியாக தமது தந்தை அந்த நாயிடம் இருந்து நெஹாலை மீட்டதாக நபில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும், அந்த நாயின் உரிமையாளரை அடையாளம் காண பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.