உலகம்
விவாகரத்தான சுவிஸ் பெற்றோருக்கு வரி தொடர்பில் முக்கிய அறிவிப்பு
விவாகரத்தான சுவிஸ் பெற்றோருக்கு வரி தொடர்பில் முக்கிய அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில், ஜனவரி 1ஆம் திகதி முதல், விவாகரத்தான பெற்றோர் செலுத்தும் வரி தொடர்பில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்தில், விவாகரத்தான பெற்றோரில் யார் குறைவான ஊதியம் பெறுகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே குழந்தையை கவனித்துக்கொள்வது தொடர்பில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுவந்தது.
2024, ஜனவரி 1ஆம் திகதி முதல், இந்த திட்டத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட உள்ளது. அதாவது, இனி, குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் இரண்டு பெற்றோர்களுக்குமே, ஒரே அளவிலான வரியே விதிக்கப்படும்.
நிதி அமைச்சரான Nathalie Fontanet இந்த முடிவை வரவேற்றுள்ளார். இந்த மாற்றம், விவாகரத்தை எதிர்கொள்ளும் பெற்றோருக்கிடையேயான ஒப்பந்தத்தை மேம்படுத்தும் என்றார் அவர்.