1 12 scaled
உலகம்செய்திகள்

உதயநிதியின் சனாதனம் குறித்து நடிகை கஸ்தூரி விமர்சனம்

Share

உதயநிதியின் சனாதனம் குறித்து நடிகை கஸ்தூரி விமர்சனம்

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு, இந்து கோயில் சொத்து மட்டும் கேட்குதா? முதலில் உண்டியலில் இருந்து கைய எடுங்க என்று நடிகை கஸ்தூரி விமர்சித்து பேசியுள்ளார்.

தமிழக அமைச்சர் உதயநிதி,”கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க கூடாது. அதன் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும்.

அதை போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி” என்று கூறியுள்ளார்.

அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன. ஆனாலும், அவர் தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “டெங்கு, மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே…அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி.

அவ்வளவு சனாதனத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ ? முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க” என்று விமர்சித்து கூறியுள்ளார்.

டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே…அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்?
ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி.

அவ்வளவு சனாதனத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ ? முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க !

Share
தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...