19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

Share

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில் தற்போது தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது.

முதல் முறையாக ஹெச். வினோத் – விஜய் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது. மேலும் இதுவே விஜய்யின் கடைசி படமாகும்.

விஜய்யின் ஜனநாயகன் படத்தை முடித்த கையோடு, இயக்குநர் ஹெச் வினோத் ரஜினியுடன் இணைந்து பணிபுரியப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை கூறியுள்ளாராம் ஹெச். வினோத்.

அந்த கதை ரஜினிக்கும், அவரது மகள் சௌந்தர்யாவிற்கு பிடித்துவிட்டதாம். ஆகையால் ஜெயிலர் 2 படத்திற்கு பின், கண்டிப்பாக ரஜினியின் படத்தை ஹெச் வினோத் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர்.

அதே போல் வீர தீர சூரன் பட இயக்குநர் அருண் குமாரும் சமீபத்தில் ரஜினிக்கு கதை கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்று.

 

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

16 12
சினிமா

சினிமாவில் இருந்து விலகும் ராஜமௌலி.. ரசிகர்கள் அதிர்ச்சி

எஸ்.எஸ்.ராஜமௌலி, இந்திய சினிமா கொண்டாடும் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர். கடைசியாக இவரது இயக்கத்தில் RRR திரைப்படம்...