உலகம்
சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் தனுஷ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் தனுஷ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கேப்டன் மில்லர் படத்தை அடுத்து தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார். இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இப்படத்தை தொடர்ந்து தனுஷின் 51 படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாஇயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற, நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில் தனுஷின் 51-வது படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.