விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான ஒலிம்பிக் நட்சத்திரம்

GettyImages 618910604

MISSISSAUGA, ON - OCTOBER 28: Alexandra Paul of Canada and Mitchell Islam compete in the Ice Dance Short Dance Program during day one of the 2016 Skate Canada International at Hershey Centre on October 28, 2016 in Mississauga, Canada. (Photo by Tom Szczerbowski/Getty Images)

விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான ஒலிம்பிக் நட்சத்திரம்

ஒன்ராறியோவில் 7 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி முன்னாள் ஒலிம்பிக் நட்சத்திரம் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

கடந்த வாரம் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் ஸ்கேட் கனடா நிர்வாகம் அஞ்சலி செலுத்தியுள்ளது. சாலை விபத்தானது ஒன்ராறியோவின் ஷெல்பர்னின் வடக்கே நடந்துள்ளது.

சம்பவத்தின் போது 31 வயதான அலெக்ஸாண்ட்ரா பால் தமது பிள்ளையுடன் பயணப்பட்டுள்ளார். அப்போது லொறி ஒன்று தவறான பாதையில் புகுந்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது வரிசையாக மோதியுள்ளது.

இதில் அலெக்ஸாண்ட்ரா பால் சம்பவயிடத்திலேயே காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளார். அவரது குழந்தை காயங்களுடன் மீட்கப்பட்டு சிறார்களுக்கான மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலெக்ஸாண்ட்ரா பால் மற்றும் அவரது இணையும் கணவருமான மிட்செல் இஸ்லாம் உடன் 2014 ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.

பல சர்வதேச பதக்கங்களை இந்த இணை வென்றது. மட்டுமின்றி, மூன்று கனடிய சாம்பியன்ஷிப் பதக்கங்களையும் வென்றுள்ளது. 2016ல் ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து அலெக்ஸாண்ட்ரா பால் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version