காட்டுத்தீயை அணைக்க இராணுவத்தை நிறுத்திய ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இராணுவத்தை நிறுத்தியுள்ளார்.
காட்டுத்தீ காரணமாக பிரிடிஷ் கொலம்பியாவில் அவசரகால நிலை விதிக்கப்பட்டது. ஆனால், கடுமையான வறட்சியால் அதிகரித்த மற்ற தீப்பிழம்புகள் அமெரிக்க எல்லைக்கு அருகிலும், அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கு பகுதியிலும் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து மேற்கு மாகாணத்தில் 35,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டிஷ் கொலம்பிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்குப் பிறகு அரசு இராணுவ உதவியை அனுப்ப ஒப்புக்கொண்டதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
கனடாவில் காட்டுத்தீ என்பது அசாதாரணமானது அல்ல, ஆனால் தீ பரவல் மற்றும் இடையூறுகள் அதன் மோசமான காட்டுத்தீ பருவத்தின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2 Comments