4 11 scaled
உலகம்செய்திகள்

உலக மக்களுக்கு எலான் மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை

Share

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் உலக மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, மக்கள் தொகை சரிவுதான் மனித நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என எலாக் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது.

மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போவதாக குறிப்பிடப்படுகிறது.

இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என கடந்த சில நாட்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது போக கொரோனா போன்ற வைரஸ்கள் காரணமாக உலகத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட கொரோனாவின் புதிய வகை வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை உலக சுகாதார மையம் துவங்கியது.

இப்படி பல விடயங்கள் மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்தான் எலான் மஸ்க் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜப்பான் 1968 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகையில் மிகப்பெரிய மொத்த வீழ்ச்சியைக் கொண்டுள்ளது.
பிறப்பு விகிதம் தேக்கமடைவதால் அமெரிக்கா நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது.

சீனாவின் கருவுறுதல் விகிதம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. சீனாவின் மக்கள் தொகை சரிந்து வருகிறது.
சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது.

இங்கிலாந்தில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
இத்தாலியின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்தது.

உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்திற்கான அவல சாதனையை தென் கொரியா மீண்டும் மேற்கொண்டு உள்ளது.
மக்கள் தொகை சரிவு காரணமாக ஏற்படும் இந்த பாதிப்புதான் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...

1 1
சினிமாசெய்திகள்

800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் ராமாயணா படத்தின் முதல் டீசர்.. இதோ பாருங்க

சரித்திர கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம்தான் ராமாயணா. இப்படத்தை இயக்குநர்...

3 2
சினிமாசெய்திகள்

ஜிம்மில் ட்ரெண்டிங் பாடலுக்கு நடனம்.. வைரலாகும் நடிகை மிருணாள் தாகூர் வீடியோ

தெலுங்கில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து...