கனடாவில் வீட்டு விலைகள் தொடர்பில் புதிய தகவல்
கனடாவில் வீட்டு விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் அந்நாட்டில் வீடுகளின் விலைகள் சற்று அதிகரித்துள்ளதாக “Teranet-National” எனும் கனேடிய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் வீடுகளின் விலைகள் 2.3 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த 4 மாதங்களாக தொடர்ச்சியாக கனடாவில் வீடுகளின் விலைகள் உயர்வடைந்து செல்வதாக கூறப்படுகிறது.
கனடாவின் ஆலிபெக்ஸில் அதிகபட்சமாக வீடுகளின் விலைகள் 4.9 வீதமாக உயர்வடைந்துள்ளதுடன் வான்கூவாரில் 3.9 வீதமாகவும், டொரன்டோவில் 3.5 வீதமாகவும் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment